தமிழ் என்றாலே புத்துணர்ச்சியும் புதுமையும் நிறைந்தது. தமிழ், தோண்ட தோண்ட பல சுவாரஸ்யங்களையும் உண்மையும் நமக்கு புரியவைக்கும். அதுவும் சங்க இலக்கியங்களை பற்றி கேட்டாலும் படித்தாலும் நமக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்
விழுப்புரம் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அதனை தத்ரூபமாக காட்சிகளாக அமைத்துள்ளனர்.
விழுப்புரம் சாலாமேட்டில் இயங்கி வரும் எம் ஜி ஆர் அரசு மகளிர் மற்றும் கலை கல்லூரியில் சங்க இலக்கியங்களை புத்தகத்தில் படித்ததை அப்படியே காட்சிகளாக பார்க்கும் விதமாக காட்சி படுத்தும் நிகழ்வு தமிழ்துறை சார்பாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்துறை மாணவிகள் 150 பேர் ஒன்றிணைந்து உழவனின் வாழ்க்கை முறை, ஐந்தினை காட்சி படுத்துதல், சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, குறுந்தொகை, நற்றிணை ஆகியனவும், சங்ககால விளையாட்டுகள், அன்பின் உயர்நிலை, காவிரி பூம்பட்டினத்தின் சிறப்புகள், போர் முறை, உணவு முறை, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பொம்மை வடிவில் மாணவிகள் காட்சி படுத்திருந்தனர்.
சங்ககால இலக்கியங்கள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மற்ற மாணவிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றிருந்ததால், ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதனைப்பற்றி மூன்றாமாண்டு மாணவி பவித்ரா கூறுகையில், இந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சங்க இலக்கியங்களைப் பற்றி பலருக்கும் தெரியாது அதுவும் சொல் வடிவிலும் எழுத்து வடிவிலும் நாம் கூறினால் யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள் அதனை அறிந்து கொள்வதற்கு.. ஆனால் நாங்கள் அதனை அப்படியே காட்சிகளாக அமைத்திருக்கிறோம்.
பார்த்தவர்களுக்கு அந்த வடிவங்கள் ஓவியங்கள் கொண்டு எளிதில் புரிந்து கொள்வார்கள். மேலும் இந்த கண்காட்சியின் மாணவிகளின் கைத்திறனையும், கலை நயத்தையும் அதிகரிக்க செய்துள்ளது என பவித்ரா கூறினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.