விழுப்புரம் : மாமிசக் கழிவுகளை சாலையின் ஓரத்தில் கொட்டி செல்லும் அவலம்
செஞ்சி - திண்டிவனம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை, அரசு பயணியர் விடுதி மற்றும் சங்கராபரணி பகுதியின் ஆற்றின் ஓரமாக மாமிச கழிவுகளும் குப்பைகளும் சில சமூக அக்கறை இல்லாதவர்கள் சாலையோரத்தில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர்.
இந்த மாமிச கழிவுகளும் குப்பைகளும் அப்பகுதியில் பெரும் துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தற்போது கொரோனா மற்றும் ஒமிக்கிரான் தொற்று பரவும் நேரத்தில் இந்த கழிவுகளால் பெருத்த உயிர் சேதமும் சுற்றுப்புற சூழல் பாதிப்படைந்தும்,சங்கராபரணி ஆற்றையும் மாசுபடுத்துகிறது என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்த துர்நாற்றத்தால் இப்பகுதியில் செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டுதான் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையினால் இதனை உடனடியாக சரி செய்யுமாறு அப்பகுதி மக்கள், சில சமூக ஆர்வலர்கள் ,கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.