மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 07.03.2022 அன்று ஒரு நாள் மட்டும்
விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் மார்ச் 3ஆம் தேதியன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 07.03.2022 அன்று ஒரு நாள், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
அன்றைய தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.
மேலும் மாணவ, மாணவியர்களுக்கு 07.03.2022 அன்று தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும்,உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 07.03.2022-க்குப் பதிலாக 19.03.2022 அன்று (சனிக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
செய்தியாளர் : சு. பூஜா -விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.