விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளராக லட்சுமி ஐ.ஏ.எஸ்., தமிழக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை 88075 66518 என்ற அலைபேசி எண் வாயிலாக தெரிவிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தேர்தல் பார்வையாளரிடம் நேரில் தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அறை எண் 9-ல் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.