விழுப்புரம்: திருமணத்தடை நீங்க பிரசித்திபெற்ற வராஹி அம்மனை வழிபடும் பக்தர்கள்
அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இக்கடவுள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. இவரது முகம் பார்ப்பதற்கு பன்றி உருவம்போல் அமைந்திருக்கும்.எதையும் அடக்க வல்லவள்.
சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும், தேவகுணமும் கொண்ட கடவுள் எனவும் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள் எனவும்,எருமை வாகனத்துடனும் பன்றி முகத்துடன் கூடிய பெண் தெய்வம் தான் வராஹி அம்மன் .
வராகர் கடவுளின் தங்கையாகவும் இவர் விளங்குகிறார்.அதுபோல பல அம்சங்களை கொண்ட கடவுளாக வராகி அம்மன் விளங்குகிறார்.
விழுப்புரத்தில் சாலமேட்டின் எல்லையில் அஷ்ட வராஹி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 2000 ஆண்டுக்கு முற்பட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகிறார்கள்.
பல நாட்களாக திருமணம் நடக்காமல் இருப்பவர்களுக்கு திருமணம் தடை நீங்கவும், பல நாட்களாக ஏற்பட்டுள்ள நிலத்தகராறு பிரச்சனை தீர்க்கவும், வீடு கட்ட முடியாத சூழ்நிலை போன்றவற்றிற்கு இந்த வராஹி அம்மனை வழிபட்டால் இந்தப் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் வராஹி அம்மன் அத்தி மரத்தால் ஆன அம்மன் ஆகும். ஒவ்வொரு வருடமும் தை மாசம் அம்மாவாசை அன்று இந்த வராஹி அம்மனுக்கு உற்சவம் நடைபெறும்.
இந்த உற்சவத்தில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். மேலும் அமாவாசை பஞ்சமி போன்ற நாட்களில் இந்த கடவுளை வழிபடலாம்.
மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க அதற்கு இந்த வராஹி அம்மனை வேண்டி மஞ்சள் கிழங்கு மாலை 54 அல்லது 108 மாலையாக அணிவித்தும், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், தேங்காய் பழத்துடன் ஏழு நெய் விளக்கு வைத்து அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்தால்,90 நாட்களில் அவர்களுக்கு திருமணம் கூடி வரும், மேலும் பல தடை நீங்க ஒவ்வொரு சனிக்கிழமை மாலையில் 8 டூ 9 மணியில் வெண்கடுகு விளக்கு ஏற்றி வழிபட்டால் பணம் தடை பணம் பிரச்சனை ஆகியன நீங்கும் என கூறப்படுகிறது.
இத்தனை பலன்களை கூடிய இந்த வராஹி அம்மனை பக்தர்கள் அதிக அளவில் வழிபட்டு வருகிறார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.