Home /local-news /

விழுப்புரம் : நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் -சமூக ஆர்வலரின் விழிப்புணர்வு 

விழுப்புரம் : நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் -சமூக ஆர்வலரின் விழிப்புணர்வு 

 Municipal

 Municipal Local Elections -Awareness of Social activist 

கரிகால சோழன் பசுமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரான சமூக ஆர்வலர்  அகிலன் வாக்காளர்களுக்கு சில விழிப்புணர்வு தகவல்களை கூறினார் 

    விழுப்புரம் : நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் -சமூக ஆர்வலரின் விழிப்புணர்வு

    விழுப்புரம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் புகார் தெரிவிக்க 1800 425 7820 மற்றும் 1800 425 1740 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

    மேலும் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவும் மற்றும் புகார் தெரிவிக்கவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக (தேர்தல்) பிரிவு கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    மேலும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறும். அதாவது தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரங்கள் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சத்தம் எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துதல் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

    கரிகால சோழன் பசுமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரான சமூக ஆர்வலர் அகிலன் வாக்காளர்களுக்கு சில விழிப்புணர்வு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார், “முதலில் வாக்கு செலுத்துவதற்கு முன் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். யாருக்கும் வாக்குகளைச் செலுத்த வேண்டாம் என்று தெளிவாக சரியான நபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் நடைபெற்றாலோ முறைகேடுகள் தெரிய வந்தாலோ அல்லது ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கினாலும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த எண்ணிற்கு தைரியமாக புகார் அளிக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்கள் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நாம் நேர்மையாக வாக்களித்தால் தான் தைரியமாக கேள்வி கேட்க முடியும்” என்று கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி