Home /local-news /

மகாத்மா காந்தி அமைதிப் பரிசு விருதுக்கு விண்ணப்பியுங்கள் - முழு விவரம்

மகாத்மா காந்தி அமைதிப் பரிசு விருதுக்கு விண்ணப்பியுங்கள் - முழு விவரம்

Individuals and charities can apply for the Gandhi Peace Prize

Individuals and charities can apply for the Gandhi Peace Prize

Gandhi Peace Prize | நம் நாட்டின் தேச தந்தை  மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளினை விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு, மைய அரசால் 1995-ல் காந்தி அமைதிப் பரிசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் காந்தி அமைதிப் பரிசு விருது பெற விண்ணப்பிக்கலாம்

    நம் நாட்டின் தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் பொருட்டு, மத்திய அரசால் 1995-ல் காந்தி அமைதிப் பரிசு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

    நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஏற்படுத்தி,அமைதி வழியில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மைய அரசின் சார்பாக காந்தி அமைதிப் பரிசு விருதுகள் வழங்கும் திட்டம் இந்த ஆண்டிற்கும் தொடங்கப்பட உள்ளது.

    எனவே இந்த அரிய விருதிற்கு தகுதியுள்ள நபர்களை விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

    இந்த விண்ணப்பத்திற்கான தகுதிகள் :

    இந்திய அரசின் பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவர் குழுவின் மூலம் அமைதி வழியில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த விருது தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை மூலம் காந்தி அமைதிப் பரிசு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

    மேலும்,தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 1 கோடி ரூபாய் தொகையும், பட்டயமும் வழங்கப்படும், இவ்விருதினைப் பெறுவதற்கு சமுதாயத்தில் பொருளாதார, சமூகரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சிறப்பாக தொண்டிடாற்றிய கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் கடந்த 10 ஆண்டுகளுக்குள் புத்தகம் வெளியிட்டிருக்க வேண்டும்.

    இந்த விருதுக்காக விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பும் ஆண்,பெண் என்ற எவ்வித பேதமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம். அது மட்டுமல்லாமல் சமுதாயத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என எவ்வித பேதமும் இல்லாமலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இதற்கான விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் இருந்து பெற்று,பூர்த்தி செய்து, அந்த விண்ணப்பத்தை 14.04.2022 அன்று மாலை 4.00 மணிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை 600 003 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

    மேற்கண்ட விருது தொடர்பான இதர விபரங்களை விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ
    (7401703485) தொடர்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Gandhi, Villupuram

    அடுத்த செய்தி