Home /local-news /

விழுப்புரம்: "என் பதவியை டிஸ்மிஸ் செய்யலாம்”-ராஜினாமா கடிதத்துடன் சுயேட்சை!

விழுப்புரம்: "என் பதவியை டிஸ்மிஸ் செய்யலாம்”-ராஜினாமா கடிதத்துடன் சுயேட்சை!

you can dismiss my post

"you can dismiss my post" - Independent candidate  

விழுப்புரம் மாவட்டத்தில்  நகராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், விழுப்புரம் 37 வது வார்டு ராகவன் பேட்டை பகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகின்றார் சூ?

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம்: "என் பதவியை டிஸ்மிஸ் செய்யலாம்”-ராஜினாமா கடிதத்துடன் சுயேட்சை!

    விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் 37 வது வார்டு ராகவன் பேட்டை பகுதிக்கு சுயேட்சை வேட்பாளராக தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகின்றார் சூரியகுமார் என்ற இளைஞர்.உடற்பயிற்சி இயக்குனராக இருக்கிறார்.

    இவர் அந்தப் பகுதியில் ட்ரீம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, அதன் மூலமாக பல்வேறு செயல்களை கிராம மக்களுக்கு செய்து வருகின்றனர்.தற்போது நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட களமிறங்கியுள்ளார். இவர் நூதன முறையில், அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

    ‘விழுப்புரம் 37 வது நகர் மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய நான், என் மீது நம்பிக்கை வைத்து என்னை சுயேட்சை நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து வெற்றி பெற செய்த, என் வார்டு பகுதி மக்களுக்கு நான் சரிவர மக்கள் மக்கள் பணி செய்யாமல் செயல்பட்டலோ அல்லது நான் ஜனநாயக செயல்பாடுகளை எனது மக்கள் விருப்பத்திற்கு மாறாக நடைமுறைபடுத்தினாலோ என்னை பதவி நீக்கம் செய்ய என் 37வது வார்டு வாக்காளர்களுக்கு முழு உரிமை உள்ளதால், நீங்கள் என் சார்பாக இந்த ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொண்டு என்னை பதவி நீக்கம் செய்யுங்கள்’ என மக்களிடம் கடிதத்தைக் காண்பித்து வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார் சுயேட்சை வேட்பாளர் சூர்யகுமார் .


    மேலும் இப்பகுதியில் ஏதேனும் பிரச்சினைகள், புகார்கள் என்றால் உடனடியாக தெரிவிப்பதற்கு ஒரு ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கி தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    First published:

    Tags: Election, Villupuram

    அடுத்த செய்தி