விழுப்புரம் : 1 ரூபாய்க்கு சுட சுட இட்லி விற்கும் பாட்டி
காலையிலேயே சுட சுட இட்லி, சட்னி சாம்பார் என்றால் எல்லோருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இன்றைய விலைவாசி சூழலில் அந்த இட்லி 1 ரூபாய்க்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் சுட சுட!
விழுப்புரம் அடுத்து பனையபுரம் என்ற கிராமத்தில் சாந்தி என்ற பாட்டி ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்றுவருகிறார். ”காலையில 6 மணிக்கு ஆரம்பிச்சு காலை 9 மணிக்குள் விற்று தீர்ந்துவிடும்” என்கிறார் உற்சாகமாக.
இவரிடம் இட்லி வாங்கி சாப்பிடுவதற்காக பனையபுரம் சுற்றியுள்ள பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை புரிகிறார்கள். ஒரு ரூபாய்க்கு சுவையாகவும், பஞ்சு போல சாஃப்ட்டான இட்லி தயாரித்து விற்பனை செய்கிறார். இட்லியுடன் சட்னி, சாம்பார், இட்லி பொடி ஆகியவை சேர்த்து தருகிறார். 10 ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டால் திருப்தியாக சாப்பிட்ட மாதிரி இருக்கிறது என வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள் .
குறைந்த விலையில் நிறைவான உணவு இங்கு விற்பனை செய்யப்படுகிறது .இந்த இட்லி கடையை தலைமுறை தலைமுறையாக நடத்தி வருகிறார்கள்.
தற்போது, இவர் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.வாடிக்கையாளர்களும் திருப்தியுடன் இங்கு வந்து இட்லியை சுவைத்து வயிறார பாராட்டிவிட்டு செல்கின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.