விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு அரசுப் பள்ளி மாணவிகளுக்கு\"அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை\" சார்பாக \"கலைஞர் விருட்சம் விருது\" வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார் மாணவி தேஜாஸ்ரீ. இவர் ஓவியத்தின் மீது மிகுந்த ஆர்வமும், காதலும் கொண்டவர் ஆவார். ஓவியத்தின் மீது கொண்ட ஆர்வம் இவரை பல விருதுகளை வாங்க வைத்திருக்கிறது.
2019-ஆம் ஆண்டு 12 அடி நீண்ட தூரிகை கொண்டு ஓவியம் வரைந்து கலாம் புக்-ஆப் உலக சாதனையும், 2022 ஆம் ஆண்டு ஓவியம் வரைந்து கொண்டே கவிதை வாசித்தும் ஜாக்கி புக்-ஆப் உலக சாதனையும் படைத்தார்.
அதேபோன்று, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி பிரேமித்ரா என்ற மாணவியும் விருது பெற்றுள்ளார். இவர் பல்வேறு வகையான ஓவியங்களை திறம்பட வரையும் மாணவி. மண்டலா ஓவியம், மது பாணி, போஸ்டர் கோலம், 3D கோலம், 3D ஓவியம், பேஸ் பெயிண்டிங் போன்றவற்றை வரைந்து சாதனை படைத்துள்ளார்.
இரு மாணவிகளின் திறமையையும், சாதனைகளையும் பாராட்டும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு\"அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை\" சார்பாக இவ்விரு மாணவிகளுக்கு \"கலைஞர் விருட்சம் விருது\" \"வழங்கியுள்ளது.
மேலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்த விருதுக்குரிய சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.