விழுப்புரம் எம் ஜி ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் தென்னம்பாலை, மூங்கில், தென்னங்குடுவை, சோளக்கதிர் கொண்டு 64 வகையான மாட்டு வண்டிகள், உருவாக்கி காட்சிப்படுத்தியது வரவேற்பினை பெற்றது.
விழுப்புரம் அருகே உள்ள சாலாமேட்டில் இயங்கி வரும் அரசு எம் ஜி ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
அழிவின் உயிர்ப்பு என்ற தலைப்பில் வேதியியல் துறை மாணவிகளுக்கு பயிற்சி பட்டறை இரண்டு நாட்கள் நடைபெற்றன. இந்த பயிற்சி பட்டறையில் தேங்காய் குடுவை, நார்கள், மூங்கில், தென்னங்பாலை, சோளக்கதிர் ஆகியவைகளை கொண்டு கைவினை கலைப்பொருட்கள் செய்ய மாணவிகளுக்கு செய்ய ஒரு பயிற்சி நிறுவப்பட்டது .
இதில் மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோர் பயிற்சி பட்டறையில் பயின்று விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 64 வகையான மாட்டு வண்டி, குதிரை வண்டிகள், விவசாயிகள் ஏர் உழுவது, பரிசல் ஓட்டுவது, படகு இயக்குவது போன்று தத்ரூபமாக வடிவமைத்தனர்.
மாணவிகள் செய்த கலைபொருட்களை கல்லூரியில் காட்சிபடுத்தப்பட்டன. அப்போது கல்லூரி மாணவிகள் கலைநயத்துடன் செய்திருந்த 64 வகையான வண்டிகள் மாணவிகள் மத்தியில் வரவேற்பினை பெற்றது.
மேலும் இந்த கைவினை பயிற்சிப்பட்டறை பற்றி மாணவிகள் கூறுகையில் ,அரசு கல்லூரியில் தேவையற்ற பொருள் என்று கீழே போடுவதை விட அதனை கைவினை கலை பொருட்களாக மாற்று எங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாகவும், எதிர்காலத்தில் கைவினை கலையின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.