தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ் கிழக்கு கடற்கரைப்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டும் மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும் தமிழக கிழக்குக்கடற்கரை நெடுக்கிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி நகரம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி முடிய 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்தடை ஆணையின்படி நடப்பாண்டிற்கு (2022) விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மேற்காணும் தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும் கடலில் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என விழுப்புரம் மாவட்ட மீனவர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எதற்காக இந்த தடை விதிக்கப்படுகிறது என்றால் ,கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 61 நாட்கள் மீனவர்கள் கடலில் மீன்பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத மீன் இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை கால ஆணையின்படி மேற்குறிப்பிட்டுள்ள 61 நாட்கள் முடியும் வரை இம்மாவட்ட முழுவதும் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க வேண்டாம் என கடலோர மீனவர்களுக்கு வேண்டுகோள்.
எனவே இந்த தடையை மீறி மீனவர்கள் யாரும் கடலில் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.