விழுப்புரம்: மனு தாக்கல் செய்த முதல் பெண் வேட்பாளர்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுதாக்கல் 28 ஆம் தேதி துவங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் இடம்பெற்றுள்ள 210 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
28 மற்றும் 29 ஆம் தேதிகளில் யாரும் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் என மூன்று நகராட்சிகள். விக்கிரவாண்டி, செஞ்சி, அனந்தபுரம், அரகண்டநல்லூர், திருவைநல்லூர், மரக்காணம், வளவனூர் என 7 பேரூராட்சிகள் உள்ளன.
நேற்று, முதல் முதலாக விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார் சுயேச்சையாக களமிறங்கும் சுமதி.இதுகுறித்து, சுயேச்சை வேட்பாளர் சுமதியிடம் நாம் பேசினோம். அப்போது, மகாராஜபுரம் 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுவதாக கூறினார் சுமதி. மேலும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன்.
அதனை நோக்கிய நகர்வுதான் தேர்தலில் போட்டியிடுவது என்று கூறினார். மேலும், இவர் இதற்கு முன்பு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இல்லத்தரசியாக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார்.
விழுப்புரத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பெண்கள் போட்டியிடலாம் என்ற தகவல் கிடைத்த உடனேயே தன்னுடைய வீட்டில் உள்ளவர்வளிடம் கூறியுள்ளார். அவர்களும் ஆதரவாக நின்று, போட்டியிட்டு ஜெயிப்பதற்கான வழிமுறைகளை செய்வாதாக நம்பிக்கையூட்டியுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் தான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் முதல் மனு தாக்கல் செய்ததில் தனக்கு மிகவும் சந்தோஷம் எனவும் நான் நிச்சயமாக ஜெயித்தால் பெண்களுக்கான உதவித் தொகை போன்ற பல உதவிகளை செய்வேன் என நம்பிக்கையுடன் கூறினார்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.