Home /local-news /

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி...

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் - ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி...

villupuram collectorate

villupuram collectorate

PM Housing Scheme | விவசாயி ஞானசேகரன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை கடந்த 8.12.2022 ஆம் தேதி உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கையால் பெற்று வீடு கட்டி வந்துள்ளார்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடுகட்டுவதற்கு ஆணை பெறப்பட்ட நிலையில் லஞ்சம் கொடுத்தால் தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்து விவசாயி ஒருவர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோலியனூரை அடுத்த கண்டம்பாக்கம் கிராமத்தை சார்ந்தவிவசாயியான ஞானசேகரன் என்பவர் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை கடந்த 8.12.2022 ஆம் தேதி உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி கையால் பெற்று வீடு கட்டி வந்துள்ளார். வீடு முழுவதுவமாக கட்டப்பட்ட நிலையில், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குப்புசாமி ஆகியோர் வீடு கட்டுவதற்காக லஞ்சமாக 30 ஆயிரம் பெற்று கொண்டு, மேலும் பத்தாயிரம் வழங்கினால் தான் நிதி ஒதுக்கீடு செய்து பணம் வழங்குவேன் என விவசாயிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி இன்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வீடு கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி மண்ணென்னைய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற நபர் மீது நீரை ஊற்றி, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி