Home /local-news /

விழுப்புரம் : படித்தவர்கள்,  மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

விழுப்புரம் : படித்தவர்கள்,  மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 

Educated unemployed youth, Physical challenged can apply scholarship 

Educated unemployed youth, Physical challenged can apply scholarship 

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பற்றோர் உதவிக்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

    விழுப்புரம் :படித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பற்றோர் உதவிக்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

    விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் 01.01.2022 தொடங்கும் காலாண்டிற்கு படித்த இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெருவதற்கான விண்ணப்பங்கள் தற்பொழுது பெறப்பட்டு வருகிறது.

    பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, பதிவினைத்தொடர்ந்து புதுப்பித்து, 31.12.2021 அன்றைய நிலையில் ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுபவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் இருக்க வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் 31.03.2022 அன்றைய தேதியில் விண்ணப்பித்தவர்களின் வயது 45 - க் குள்ளும், இதர இனத்தைச்சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும், இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி,மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்விக்கு 200 ரூபாயும்,பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு 300 ரூபாயும்,மேல்நிலை கல்விதேர்ச்சிக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாயும்,

    மாற்றுத்திறனாளிகளுக்கு :

    பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு 650 ரூபாயும்,மேல்நிலை கல்விதேர்ச்சிக்கு 700 ரூபாயும்,பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 1000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

    விண்ணப்பிக்க வருபவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அலுவலகத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள்.

    மேலும் இந்த விண்ணப்பத்தினை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில்
    அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள்,வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகத்துடன் நேரில் சமர்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆற்றிய மோகன் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி