Home /local-news /

சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு.. இடுகாட்டுக்கு பாதை வேண்டி தர்ணா.. இன்றைய (ஏப்ரல் 28) விழுப்புரம் மாவட்ட செய்திகள்..

சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு.. இடுகாட்டுக்கு பாதை வேண்டி தர்ணா.. இன்றைய (ஏப்ரல் 28) விழுப்புரம் மாவட்ட செய்திகள்..

A compilation of today's news of Villupuram district

A compilation of today's news of Villupuram district

Villupuram District: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளின் தொகுப்பு 

  விழுப்புரம் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..

  பாதாள சாக்கடை நிலையத்துக்கு எதிர்ப்பு:

  விழுப்புரம் காக்குப்பம் ஏரியில் நீர் ஆதாரங்கள், நீர் வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டத்திற்கு புறம்பாகவும், நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராகவும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அப்போது காகுப்பம், பொய் பாக்கம், இந்திரா நகர், எம்ஜிஆர் நகர், கட்டபொம்மன் நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் நீர் நிலைகளில் பாதாள சாக்கடை கட்டக் கூடாது என்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்து பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தது காகுப்பம் ஏரி மீட்பு கூட்டமைப்பினர்.

  எனவே மக்கள் எதிர்ப்பை மீறி கட்டப்பட்டுள்ள பாதாள சாக்கடை நிலையத்தை போர்க்கால அடிப்படையில் ஆய்வு செய்து நிரந்தரமாக மூடுவதற்கும் விழுப்புரம் நகராட்சி புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டியை தடுத்து நிறுத்தியும், இதன் மூலம் பரவும் நோயிலிருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர் காகுப்பம் ஏரி மீட்பு கூட்டமைப்பினர்.

  மதகடிப்பட்டு - வளவனூர் இடையே புதிதாக டோல்கேட் அமைக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு

  விழுப்புரம் -  நாகப்பட்டினம் நான்கு வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் கெங்கராம்பாளையம் முதல் மும்மொழி நாயக்கன் குப்பம் வரை  சாலை விரிவாக்கம் செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மதகடிப்பட்டு - பலநூறு இடையில் புதிதாக டோல்கேட் அமைக்கும் இடம் தேர்வு செய்துள்ளதாக தெரியவருகிறது.

  தேர்வு செய்யப்பட்ட இடம் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடமாகும். வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் தொழில்முனைவோர் ,கழிவு நிலங்கள் தனியார் மற்றும் பணிகள் கடுமையாக இதனால் பாதிக்கப்படுவார்கள் என ஈஐடி பாரி அரியூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த டோல்கேட்டை தொழில்நுட்ப தேசிய நெடுஞ்சாலையில் அமைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

  நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு.

  விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம் மற்றும் ஒலக்கூர் ஒன்றியதுக்குட்பட்ட பாங்கொளத்தூர், ஆவணிப்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் மோகன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கொள்முதல் செய்யப்படும் நெல் அளவு, நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெறுவதாக என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

  இடுகாட்டுக்கு பாதை வேண்டி பொதுமக்கள் தர்ணா

  மயிலம் அருகே ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு பயன்படுத்தி வந்த பாதை, தற்போது துண்டிக்கப்பட்டது.
  இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர். இருப்பினும் அவர்களது கோரிக்கை இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை.

  இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர்:

  விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

  ஊராட்சியில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்,தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10 ஆயிரத்தை ஊராட்சி மூலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

  தொழிலாளர் தினத்தன்று கிராமசபை கூட்டம்

  விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம், பொது செலவினம், சுகாதாரம், ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னெற்றம், நிதி செலவின விவரங்கள், மக்கள் திட்டமிடல் இயக்கம், ஊட்டச்சத்து இயக்கம், நெகிழிப்பொருள்கள் உற்பத்தியை தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், ஜல்ஜீவன் திட்டம், வேளாண்மை, உழவா் நலத் துறை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  சீரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு

  சக்கராபுரத்தில் உள்ள சிறுவா் பூங்கா முறையாக பராமரிக்கப்படாததால் இருந்த நிலையில், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற மொக்தியாா்மஸ்தான் பூங்காவை பாா்வையிட்டு, அதை 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ.7 சீரமைக்க நடவடிக்கை எடுத்தாா். இதையடுத்து, இதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன. சீரமைக்கப்பட்ட சிறுவா் பூங்காவை மாநில சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் சிறுவா்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

  ஏராளமான பக்தர்களுடன் கொண்டாடப்பட்ட பிரதோஷம்

  விழுப்புரம் கேகே ரோட்டில் அமைந்துள்ள ஆதி வாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நாளான இன்று பல பக்தர்களுடன் சிறப்பான பூஜை நடைபெற்றது. பிரதோஷத்தில் சிறப்பான பூஜைகள், அபிஷேகங்கள் ஈஸ்வருக்கு நடைபெற்றது. இதனை பக்தர்கள் ஏராளமானோர் மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர். பின்பு வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும் என பக்தர்கள் விளக்கு ஏற்றினார்கள்.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
  Published by:Arun
  First published:

  Tags: Villupuram

  அடுத்த செய்தி