தமிழ்நாடு தொழிலாளர் நலத் துறையின் கீழ் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்கள் சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால், அவர்களாகவே வீடு கட்டிக் கொள்ள நிதியுதவி வழங்குவது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதியுதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்கும் திட்டத்தில் பயன் பெறுவோர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தொழிலாளியாக பதிவு பெற்று, தொடர்ந்து 3 ஆண்டு காலம் உறுப்பினராக இருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருத்தல் கூடாது மற்றும் மத்திய மாநில அரசுகளின் வேறு எந்த வீட்டு வசதி திட்டங்களிலும் பயன் பெற்றிறுந்திருக்க கூடாது. மேலும்,ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல்,குறைந்தபட்சம் 300 சதுரஅடி சொந்த இடம் கொண்டிருக்க வேண்டும். இந்த இடம் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளியின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ இணைந்து,வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும். அதற்கான தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
முதல் தவணை ரூபாய் இரண்டு லட்சத்து எழுபத்து ஆறாயிரமும், இரண்டாம் தவணையாக ஒரு லட்சத்து இருபத்து ஐந்தாயிரமும் வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே வீட்டு மனை இல்லாத பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தேர்ந்தெடுத்து குடியிருப்பு ஒதுக்கீடு பெறவும் இத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள்,பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் இணையதள முகவரிhttp://tnuwwb.tn.gov.inமுகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் சொந்தமாக வீடு இல்லையெனில் மேற்கண்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய முறையில் இணையதளத்தில் மனு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.