விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், ஊக்கத்தொகை நிலுவையில் உள்ளது குறித்தும், மூன்று மாத சம்பளம் தராமல் நிலுவையில் உள்ளதாகவும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தர வேண்டுமென நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளித்தனர்.
கொரோனா பெருந்தொற்றை, கட்டுப்படுத்துவதற்கும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலமாக அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் நாங்கள் அரசுடன் இணைந்து சிறப்பாக எங்களது பணியை செய்து வந்தோம். ஆனால் தற்போது வரை எங்களுக்கு பணி நீட்டிப்பு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு கூறவில்லை. எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்றும் அதுமட்டுமல்லாமல் நிலுவையிலுள்ள ஊக்கத்தொகை, மூன்று மாத சம்பளம் ஆகியவற்றை வாங்கி தருமாறு மாவட்ட ஆட்சியர் மோகனிடம் கொரானா தொற்று காலத்தில் பணியாற்றிய 46 செவிலியர்கள் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செவிலியர்களிடம் பேசிய ஆட்சியர் மோகன், தங்களுக்கு 3 மாத சம்பளமும் நிலுவையிலுள்ள ஊக்கத்தொகையும் வழங்குவதற்கான நடவடிக்கையில் நான் எடுக்கிறேன் என்று கூறி செவிலியர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.