Home /local-news /

விழுப்புரம் : 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

விழுப்புரம் : 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

Villupuram:

Villupuram: Discovery of 14th century Chola inscriptions

விழுப்புரம் அருகேயுள்ள ஆனாங்கூர் என்ற கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

  • Last Updated :
    விழுப்புரம் : 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

    விழுப்புரம் அருகேயுள்ள ஆனாங்கூர் என்ற கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    இதனை விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் மற்றும் முதல்நிலை வரலாற்று மாணவர்களான நிவன், உக்கிர மூர்த்தி, கலைமணி கலைப் பயணம் மேற்கொண்டபோது இந்த கல்வெட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி பி1070.1120), விக்கிரமச் சோழன் (118.1135) இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133.1150) ஆகிய சோழ மன்னர்கள் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
    இவையாவும் இந்த கோயிலில் சுவரில் சுண்ணாம்பு பூச பட்டிருந்ததால் இதுவரை மறைந்து இருந்தது. தற்போது, மாணவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வண்ணத்தை நீக்கி இந்த கல்வெட்டை கண்டறிந்துள்ளனர்.

    இக்கல்வெட்டுகள் முழுமை பெறவில்லை. எனினும் கங்கைகொண்ட சோழ வள நாட்டு பனையூர் நாட்டில் ஆனாங்கூர் என்று இவ்வூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 8 அடி நீளம் கொண்ட அளவுகோல் ஒன்று போடப்பட்டும், குழிகோல் என்று குறிக்கப்படுகிறது.

    இது சோழர் காலத்தில் நிலத்தை அளப்பதற்கு பயன்பட்ட அளவுகோலாகும். கருவறையின் குமுத பட்டியில் ஆனாங்கூர் சேர்ந்த பொற்கொல்லர் ஆன சிற்றம்பலவன் படலன் என்பவன் தளிகை ஒன்றும் மணி ஒன்றும் வழங்கி உள்ளதை 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.

    இக்கோயிலில் பல்லவர்கால விஷ்ணு சிற்பம், கருடாழ்வார் சிற்பம், சோழர்கால விஷ்ணு சிற்பம் உள்ளன.
    தற்போது கோயிலில் கருவறையின் உள்ளே 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூலவர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இக்கோயிலின் வடக்கு புற சுவரில் 38 அடி நீளம் கொண்ட பெரிய அளவு கோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த அளவுகோல் ரத்து அளவுகோல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது, 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இவ்வூரில் பல்லவர்கால சிவன் கோயில் இருந்ததை மூன்றாம் நந்திவர்மன் உடைய கல்வெட்டு தெரிவிக்கிறது .மேலும் பல்லவர்கால அரிய முருகன் சிற்பம் ஒன்றும் இவ்வூரில் உள்ளது.

    இதனை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தொல்லியல் துறைக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி