Home /local-news /

பெட்டிக் கடை வைத்து தரக்கோரி மாற்றுத்திறனாளி நபர் திடீர் தர்ணா.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

பெட்டிக் கடை வைத்து தரக்கோரி மாற்றுத்திறனாளி நபர் திடீர் தர்ணா.. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

protest inside the Collector's Office of the disabled demanding a small shop

protest inside the Collector's Office of the disabled demanding a small shop

Villupuram District | விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிவக்குமார், ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சுயதொழில் தொடங்க ஒரு பெட்டிக் கடை வைத்து தரக்கோரி மாற்றுத்திறனாளி நபர்  தனது மனைவி, குழந்தைகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிவக்குமார், திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெட்டிக்கடை ஒன்றை வைத்து கொண்டு தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந்த 2019 ஆண்டு அகற்றும் போது நகராட்சி நிர்வாகத்தினர் மாற்றுத்திறனாளி சிவக்குமாரின் பெட்டிக்கடையையும் சேர்த்து அகற்றியுள்ளனர்.

    இதனால் கடந்த சில ஆண்டுகளாக வாழ்வாதாராமின்றி  தவித்து வந்ததால் சுயதொழில் தொடங்குவதற்கு, பெட்டிக்கடை வைத்து தருமாறு, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிவக்குமார், மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால்  தனது மனைவி குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுதிறனாளியிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டு, அவரை அனுப்பி வைத்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்

     
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி