Home /local-news /

விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயிலில் 472வது ஆண்டு திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயிலில் 472வது ஆண்டு திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Villupuram:

Villupuram: Fire Festival at Thirapathi Amman Temple - Sami Darshan 

Villupuram Dhroupathi Amman Temple | விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதித்தனர்.

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரெளபதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதித்தனர்.

    விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற திரெளபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    திரெளபதி அம்மன் கோயிலில் 472-ம் ஆண்டாக கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அந்நாளில் இருந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில், முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    தீமிதி திருவிழாவின் சிறப்பான செயல் கரகத்தினை பக்தர்கள் தூக்கி கொண்டு, தீ மிதித்தையடுத்து கோயில் முன்பு அமைக்கப்படிருந்த, தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி, பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதன் பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Hindu Temple, Villupuram

    அடுத்த செய்தி