விழுப்புரம்: 9 ரூ முதல் 99 ரூபாய் வரை விற்பனையாகும் சுவையான மீன்கள்
விழுப்புரம் அடுத்த கே. கே ரோட்டில் அமைந்துள்ளது அலைகள் கடல் உணவு என்ற கடை. இங்கு, பல்வேறு வகையான மீன்கள் விற்கப்படுகின்றன.மத்தி, ராம் பாறை,கிழங்கான்,நெத்திலி, சங்கரா,கனவா,வஞ்சிரம், ஃபிங்கர் ஃபிஷ், தேங்காய் பாறை போன்ற பல்வேறு வகையான மீன்கள் இந்த கடைகளில் விற்கப்படுன்றன.
இந்த மீன்களை 9 ரூபாய் முதல் 99 ரூபாய் என்ற விலையில் விற்கிறார்கள். முதலில் 9 ரூபாய் முதல் 49 ரூ வரை என்று தொடங்கப்பட்டது.
அதன்பின், பொது மக்களின் அதிக வருகையால் 99 ரூபாய் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மிக அதிக அளவில் இக்கடைக்கு வருகை புரிகிறார்கள். காரணம், இக்கடையில் விற்கப்படும் மீன்களின் ரகமும் சுவையும்தான்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.