விழுப்புரம் மாவட்டத்திலேயே முதல் முறையாக பாலி ஹவுஸ் முறையில் ஆர்கானிக் (ENZA ZADEN - Orub F1) என்ற ரக வெள்ளரியை விவசாயம் செய்து வரும் பட்டதாரி விவசாயியின், வெள்ளரி செடிகள் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தினால் கருகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் கிராமத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நடராஜ் என்பவர் கொரோனோ காலகட்டத்தில் வேலையை இழந்ததையடுத்து பாரம்பரிய மிக்க விவசாயத்தில் களமிறங்கினார்.
தொழில்நுட்டபம் உதவியுடன் ஆர்க்கானிக் வெள்ளரி பயிர் செய்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்திலேயே முதல் முறையாக யாரும் பயிரிடாத ஆர்கானிக் வெள்ளரியை 25 சென்டில் பயிர் செய்து வரும் இவருக்கு வெள்ளரி விவசாயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காவிட்டாலும், 25 சென்ட் சென்டில் 10 டன் மகசூலை பெற வேண்டும் என்று நோக்கத்துடன் வெள்ளரியை பயிர் செய்துள்ளார்.
பயிர் சாகுபடி குறித்து நடராஜ் கூறுகையில், காலநிலை மாற்றத்தினால் வெள்ளரி விவசாயத்தில் லாபம் கிட்டாமால் போனாலும் தொடர்ந்து வெள்ளரிக்காய் பயிர் செய்து வருகிறேன். தற்பொழுது அதிகளவு விழுப்புரத்தில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக வெள்ளரி செடிகள் காய்ந்து போய் பூக்களும், வெள்ளரிக்காய் பிஞ்சுகளையும் கீழே வீணாக கீழே கொட்டுகிறேன்.
மண் தயார் செய்து செடி வளர்த்தல் உரம் போடுதல் போன்றவற்றுக்கு எனக்கு மொத்தமாக 65 ஆயிரம் ரூபாய் ஆனது. நான் போட்ட முதலீட்டை எடுப்பதற்கு இந்த வெள்ளரி நல்ல முறையில் விளைந்து இருந்தால், 3 லட்சம் வரை நான் லாபம் பார்த்திருப்பேன். ஆனால் இதுவரை எந்த லாபமும் கிடைக்க வில்லை என்றார் வேதனையுடன்,
விழுப்புரம் மாவட்டத்திலேயே ஆர்க்கானிக் முறையில் வெள்ளரிக்காய் விவசாயம் செய்து வரும் விவசாயிக்கு லாபம் கிடைக்காவிட்டாலும், தோட்டக்கலை துறை அதிகாரிகள், விவசாயத்தில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நபர்கள் வெப்பத்தினால் வெள்ளரிக்காய் வீணாகுவதை தடுக்க தொழில்நுட்ப ரீதியாக உதவ எனக்கு வேண்டுமென விவசாயி நட்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.