Home /local-news /

மல்லர் கம்பம் போட்டியில் தங்கம்.! அசத்திய விழுப்புரம் மாணவன்!

மல்லர் கம்பம் போட்டியில் தங்கம்.! அசத்திய விழுப்புரம் மாணவன்!

தங்கம் வென்ற மாணவர்

தங்கம் வென்ற மாணவர்

Villupuram | மாநில அளவில் ராஜஸ்தானில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் முதல் இடம்பிடித்து தங்க பதக்கம் வென்று, விழுப்புரம் திரும்பிய  கல்லூரி மாணவனுக்கு,ரயில்நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர் மக்கள்.

    விழுப்புரத்தை சேர்ந்த மாணவன் மாநில அளவில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் தங்கப்பதக்கம்

    மாநில அளவில் ராஜஸ்தானில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் முதல் இடம்பிடித்து தங்க பதக்கம் வென்று, விழுப்புரம் திரும்பிய கல்லூரி மாணவனுக்கு,ரயில் நிலையத்தில் மக்கள். உற்சாக வரவேற்பு அளித்தனர்

    அகில இந்திய அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான மல்லர்கம்பம் விளையாட்டு போட்டிகள் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் அனுமந்திலுள்ள குஷால் தாஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 51 பல்கலைக்கழகங்களை சார்ந்த கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து 5 பல்கலைகழகங்களை சார்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மல்லர் கம்ப போட்டியில் விழுப்புரம் அரசு அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் பயிலும் மல்லன் ஹேமச்சந்திரன் மல்லர் கம்பம் தனித்திறன் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்று மாநில அளவில் முதல் பிடித்து தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மல்லன் ஆதித்தன் தங்க பதக்கம் வென்றிருந்த நிலையில் தற்போது விழுப்புரத்தை சார்ந்த இரண்டாவது கல்லூரி மாணவன் மல்லர் கம்ப போட்டியில் தங்கபதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

    மேலும் மல்லர் கம்ப போட்டியில் தங்க பதக்கம் வென்று ரயில் மூலம் நேற்று விழுப்புரத்திற்கு வருகை புரிந்த மல்லன் ஹேமச்சந்திரனுக்கு மல்லர் கம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Sports, Villupuram

    அடுத்த செய்தி