Home /local-news /

விழுப்புரம்: அரசு வேலைக்கு தகுதிபடுத்தும் மைய நூலகத்தின் சிறப்பு

விழுப்புரம்: அரசு வேலைக்கு தகுதிபடுத்தும் மைய நூலகத்தின் சிறப்பு

மைய

மைய நூலகத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 436  நூல்கள் உள்ளன. இங்கு,  பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. நூலகத்தில் நாளிதழ்கள் பருவ இதழ்கள் பிரிவு, நூல் இரவல் பிரிவு, போட்டித் தேர்வு மற்றும் குறிப்பதிவு பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இணையதள ப?

மைய நூலகத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 436  நூல்கள் உள்ளன. இங்கு,  பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. நூலகத்தில் நாளிதழ்கள் பருவ இதழ்கள் பிரிவு, நூல் இரவல் பிரிவு, போட்டித் தேர்வு மற்றும் குறிப்பதிவு பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இணையதள ப?

மேலும் படிக்கவும் ...
    மைய நூலகத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 436 நூல்கள் உள்ளன. இங்கு, பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன.

    நூலகத்தில் நாளிதழ்கள் பருவ இதழ்கள் பிரிவு, நூல் இரவல் பிரிவு, போட்டித் தேர்வு மற்றும் குறிப்பதிவு பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகள் பிரிவு, இணையதள பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, நடமாடும் நூலகம் எனப் பல பிரிவுகள் உள்ளன.

    அதனாலேயே, இந்த நூலகம் எப்போதும் படிப்பாளர்களால் நிறைந்திருக்கிறது.இங்கு, 17,122 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 1,000 ரூபாய் செலுத்தி புரவலராக சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 155 பேர்.மாற்றுத்திறனாளிக்கான தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு விழுப்புரம் சுற்றியுள்ள பல பகுதியிலிருந்து இளைஞர்கள் வருகிறார்கள்.

    இளைஞர்கள், இளைஞிகள், திருமணமான பெண்கள் என ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 300 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மைய நூலகத்தின் மூலம் பயனடைகிறார்கள்.மேலும் இங்கு மாவட்ட போட்டித்தேர்வு பயிற்சி மையம் மூலமாக வருகை புரியும் நபர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதன்மூலம் 2019 ஆண்டில் 107 பேர் தகுதி அடைந்துள்ளார்கள்.

    பாடநூல்கள், எழுத்துத் தேர்வு புத்தகங்கள், கதை- இலக்கியம் போன்ற பல புத்தகங்களை அதிக அளவில் வருகை புரியும் நபர்களால் எடுத்து படிக்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள இந்நூலகம், 01.11.1957 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த நூலக விடுமுறை நாட்கள் பிரதி வெள்ளிக்கிழமை, வார விடுமுறை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செயல்படாது.

    இந்த நூலகத்தின் நூலகராக காசி, விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாலசரஸ்வதி ஆகியோர் உள்ளனர். மேலும் எழுத்துத் தேர்வு சம்பந்தப்பட்ட மூன்று செட் புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு செட்டிலும் குறைந்தபட்சம் 84 புத்தகங்கள் உள்ளன.

    இதுகுறித்து, நூலகத்துக்கு வருகை புரியும் ஆனந்தி நம்மிடம், “இந்த மாவட்ட நூலகம் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாங்கள் எங்களுடைய பாடப்புத்தகங்களும் எடுத்துக் கொண்டு வருவோம். இங்கிருக்கிற புத்தகங்களையும் எடுத்து படிப்போம்.

    மேலும் இங்கு பல பகுதியிலிருந்து பலபேர் இங்கு நூலகத்திற்கு வருகை புரிவதால், எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நாங்கள் கேட்டு தீர்த்துக் கொள்கிறோம். இங்க வருகை புரியும் ஒட்டுமொத்த நபர்களின் கோரிக்கையாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். மாத சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இந்த மைய நூலகம் செயல்பட்டால் எங்களை போன்ற மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்” என்று கோரிக்கை வைக்கிறார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி