Home /local-news /

விழுப்புரம்: நீங்கள் வாங்கும் விதைகள் தரமானதா? எச்சரிக்கும் விதை ஆய்வு அதிகாரி

விழுப்புரம்: நீங்கள் வாங்கும் விதைகள் தரமானதா? எச்சரிக்கும் விதை ஆய்வு அதிகாரி

விழுப்புரம்:  நீங்கள் வாங்கும் விதைகள் தரமானதா? எச்சரிக்கும் விதை ஆய்வு  அதிகாரி

விழுப்புரம்: நீங்கள் வாங்கும் விதைகள் தரமானதா? எச்சரிக்கும் விதை ஆய்வு அதிகாரி

கோடை பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை, விதை வணிக உரிமம் பெற்ற அரசு கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் உரிய ரொக்க ரசீதுடன் வாங்கவேண்டும்.

    விழுப்புரம்: நீங்கள் வாங்கும் விதைகள் தரமானதா? எச்சரிக்கும் விதை ஆய்வு அதிகாரி


    விவசாயிகள் தங்கள் பயிரிடுவதற்கு முன் விதைகளை பரிசோதித்தும் தங்களுக்கு தெரிந்த கடைகளிலும் தரமான விதைகளா என பரிசோதனை செய்தபிறகே வாங்கி அதனை பயிர் செய்ய வேண்டும். இல்லையென்றால் பயிர் செய்த பிறகு தேவையில்லாத பல பிரச்சினைகளை விவசாயிகள் பார்க்கக்கூடும் என்று எச்சரித்து விழிப்புணர்வூட்டியுள்ளார் விதை ஆய்வு துணை இயக்குனர் சீனிவாசன்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கோடை பருவ சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதைகளை, விதை வணிக உரிமம் பெற்ற அரசு கூட்டுறவு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் உரிய ரொக்க ரசீதுடன் வாங்கவேண்டும்.

    விதை வணிக உரிமம் பெறாத விதை விற்பனை நிலையங்களிலோ அல்லது விதை வாங்கியதற்கான உரிய ரொக்க ரசீது இல்லாமலோ விதைகள் வாங்கினால், பின்னாளில் தரமற்ற விதைகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டுஅரசினால் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர் ரகங்களைத் தவிர்த்து தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் நெல், மக்காச்சோளம், உளுந்து மற்றும் எள் முதலான விதைகளை வாங்கும் போது அவை இந்த பருவத்திற்கு ஏற்றவையா? இல்லையா? என்பது பற்றி விவர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.

    தனியார் நிறுவன விதைகள், விதைகளின் தரம் மற்றும் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மகசூல் பெறப்பட்ட விவரம், முதலியவற்றை அறிந்து உரிய ரொக்க ரசீதுடன் வாங்க வேண்டும் . சரியான விதை விதைத்தால் தான் நல்ல முறையில் அறுவடை செய்து மகசூல் பெற முடியும்” என்று கூறியுள்ளார்.

    செய்தியாளர்: சு. பூஜா - விழுப்புரம்

    Published by:Murugesh M
    First published:

    அடுத்த செய்தி