விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அம்மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் மற்றும் சலவை பெட்டி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் ஆண்டு வருமான வரம்பு ஒரு லட்சமாக இருக்க வேண்டும். கைம்பெண்
(விதவைகள் ) மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி பெற்றிருப்பின் மீண்டும் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டி பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே இந்த தையல் இயந்திரம் பெறுவதற்கானதகுதியை அடையமுடியும்.
எனவே தகுதியுடையவர்கள் இன்று (3.3.2022 )முதல் அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.