Home /local-news /

இயற்கை முறையில் காய்கறி தோட்டம்.. அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான உணவு பறிமாறும் ஊழியர்கள்...

இயற்கை முறையில் காய்கறி தோட்டம்.. அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்தான உணவு பறிமாறும் ஊழியர்கள்...

At

At the Anganwadi Center, the staff cooks food for the children 

Villupuram District | விழுப்புரம் அடுத்த மரக்காணத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திலேயே இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை கொண்டு, குழந்தைகளுக்கு சத்தான சமையல் செய்து தரும் ஊழியர்கள்.

    அங்கன்வாடி மையத்தில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம்.. குழந்தைகளுக்கு சத்தான உணவு பறிமாறும் ஊழியர்கள்...

    விழுப்புரம் அடுத்த மரக்காணம் பேரூராட்சி செல்லியம்மன் கோயில் அங்கன்வாடி மையத்திலேயே இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகளை கொண்டு, அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகளுக்கு உணவு சமைத்து தருகிறார்கள் அங்கன்வாடி ஊழியர்கள்.

    இந்த அங்கன்வாடி மையத்தில் 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகை புரிகின்றனர்.
    இந்த அங்கன்வாடி மையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான உணவுகளை சமைத்து தருகிறார்கள் அங்கன்வாடி ஊழியர்களான சுமதி மற்றும் ஹேமாவதி.

    திங்கள் கிழமை என்றால் தக்காளி சாதம் - முட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் காய்கறி சேர்ந்த கலவை சாதம், (பச்சைப்பயிறு, முட்டை), புதன்கிழமை காய்கறி புலாவ் சாதம், வியாழன் கிழமை எலுமிச்சை சாதம் (முட்டை), வெள்ளிக்கிழமை பருப்பு சாதம் (உருளைக்கிழங்கு), சனிக்கிழமை பருப்பு சாதம் போன்ற உணவுகளை அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தைகளுக்கு சமைத்துக் தருகிறார்கள்.

    இந்த வயதில் குழந்தைகள் ஆரோக்கியமான, சத்தான உணவை உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அங்கன்வாடி மையத்தில் இயற்கை முறையில், காய்கறி தோட்டத்தை அமைத்து அதில் விளையும் காய்கறிகளை கொண்டு, அதாவது புடலங்காய், பாகற்காய், புளிச்சக்கீரை, தர்பூசணி, கொத்தவரை, வேர்க்கடலை, முள்ளங்கி ஆகியவற்றை அங்கன்வாடி மையத்திலேயே விளைவித்து, அறுவடை செய்து, அதனைக் கொண்டு உணவு சமைத்து குழந்தைகளுக்குப் தருகிறார்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.

    இது போன்ற இயற்கை முறையில் விளைவித்த காய்கறியை கொண்டு சமைத்த உணவை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், போதிய ஊட்டச்சத்துடனும் இருப்பதாக அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் அங்கன்வாடி ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் இதனை சமைத்து தருகிறார்கள். தாயுள்ளத்துடன் இந்த செயலை செய்துவரும் அங்கன்வாடி ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டியும், வாழ்த்தியும் வருகின்றனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி