Home /local-news /

பி.எம்.கிசான் திட்ட பயனாளர்களுக்கு ஓர் அறிவிப்பு 

பி.எம்.கிசான் திட்ட பயனாளர்களுக்கு ஓர் அறிவிப்பு 

 An announcement to the incentive for farmers under the PM Kisan scheme 

 An announcement to the incentive for farmers under the PM Kisan scheme 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் 11வது தவணை தொகை பெற ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    அதாவது பி.எம்.கிசான் திட்டத்தின்கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வழங்கப்படும். அதாவது, ஆண்டிற்கு 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் போடப்படும். விவசாயத்திற்கு பயன்படும் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு இந்த ஊக்கத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 2,90,000 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுக்கு 10 தவணை வரப்பெற்றுள்ளது.

    தற்போது விவசாயிகள் 11வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்ப்பது அவசியமாகும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் தங்கள் விபரங்களை பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் சரிபார்ப்பு செய்யலாம். ஆதார் எண்ணுடன் கைபேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை கொடுத்தும்,விரல் ரேகை பதிவு செய்தும் விபரங்களை பார்த்து கொள்ளலாம்
    இந்த விபரங்களை அறிந்துகொள்ள இ- சேவை மையத்திற்கு செல்லும் விவசாயிகள் 15 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    விவசாயிகள் தங்கள் ஆதார் விபரங்களை வருகின்ற 05.03.2022-க்குள் திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கான 11வது தவணைத் தொகை பெற முடியும் என விவசாயிகளுக்கு ஒரு அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி