"தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு \" என்ற பாரதியாரின் கவிதைக்கு இணங்க விழுப்புரத்தில் ஒரு நெகிழ்ச்சியான செயலில் ஈடுபட்டார் தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்.
விழுப்புரம் நகராட்சி தேர்தலில் 41 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதிலும், தனக்கு வாக்களித்த பகுதி மக்களின் வீடு வீடாக சென்று காலில் விழுந்து நன்றியை தெரிவித்தார்.
விழுப்புரம் நகராட்சி தேர்தலில் 41வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணன் 362 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட சாந்தகுமார் 369 வாக்குகளும் பெற்ற நிலையில்,சாந்தகுமார் 7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வெற்றி வேட்பாளர்கள் மட்டும் தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு வீடுவீடாக சென்று மேள தாளங்கள் முழங்க நன்றி தெவிப்பதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கு நேர் மாறாக 41 வது வார்டில் போட்டியிட்டு 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விஅடைந்த அதிமுக வேட்பாளர் கிருஷ்ணன் வீடு வீடாக சென்று தோல்வி அடைந்தாலும், தனக்காக வாக்களித்ததற்காக நன்றி தெரிவிக்கும் வகையில் தந்தை பெரியார் நகர், அன்னை தெரசா நகர் ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று பெரியவர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றார்.
அதிமுக வேட்பாளரின் இத்தகைய செயல், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் தோல்வி அடைந்தாலும் தனது பகுதி மக்களுக்காக எந்நாளும் உழைத்துக் கொண்டே இருப்பேன் எனவும் அடுத்த தேர்தலில் தனது வார்டு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பினை அளிப்பார்கள் என கிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.