Home /local-news /

விழுப்புரம்: ஒருநாளைக்கு 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்- அரசிடம் உயிர்பிச்சை கேட்கும் காதல் மனைவி

விழுப்புரம்: ஒருநாளைக்கு 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்- அரசிடம் உயிர்பிச்சை கேட்கும் காதல் மனைவி

3

3 oxygen cylinders per day - a loving wife asking the government for her help 

Villupuram மாவட்டம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் உள்ளது கருமாரியம்மன் கோயில் தெரு. இந்த தெருவில் ஒரு சிறிய கூரை  வீட்டில் ஒரு நாளைக்கு மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர் என மரணத்துடன்  போராடிக்கொண்டிருக்கும் கணவர் சத்யாவை  காப்பாற்றப்போராடி வருகிறார் கைக்குழந்தைக்கு தாயான கங்கா.

மேலும் படிக்கவும் ...
    விழுப்புரம்: ஒருநாளைக்கு 3 ஆக்ஸிஜன் சிலிண்டர்- அரசிடம் உயிர்பிச்சை கேட்கும் காதல் மனைவி

    விழுப்புரம் மாவட்டம் ராஜிவ்காந்தி நகர் பகுதியில் உள்ளது கருமாரியம்மன் கோயில் தெரு. இந்த தெருவில் ஒரு சிறிய கூரை வீட்டில் ஒரு நாளைக்கு மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர் என மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் கணவர் சத்யாவை காப்பாற்றப் போராடி வருகிறார் கைக்குழந்தையுடன் இருக்கும் காதல் மனைவி.

    இதுகுறித்து காதல் மனைவி கங்கா நம்மிடம் பேசுகையில், “எங்களுக்கு இரண்டரை வயதில் கவின், 9 மாத கைக்குழந்தை கிரிதரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.“கடந்த 2017 ஆம் ஆண்டு நானும் சத்யாவும் காதல் திருமணம் செய்துகொண்டோம். எங்க இருத்தரப்பில் இருந்தும் பெரிதாக ஆதரவு இல்லாததால் நாங்கள் வீட்டை விட்டு தனியாக வந்து வாழத் தொடங்கினோம்.

    அவர் கூலி வேலைக்கு சென்று வரும் வருமானத்தை வைத்துதான் குடும்பத்தை பார்த்துக்கொண்டோம். இந்நிலையில் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார் என் கணவர். நான் தொடர்ந்து அவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தும் எந்த மருத்துவமும் கைக்கொடுக்கவில்லை.

    இந்நிலையில், நுரையீரல் முற்றிலும் பழுந்தடைவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்” என கண்ணீர் மல்க கூறும் கங்கா, செய்வதறியாது திகைத்து சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் என அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று பல நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கைக்குழந்தையோடு பாதுகாத்து வந்துள்ளார்.

    முழுவதும் மூச்சு விட சிரமத்திற்குள்ளான நிலையில் சத்யாவுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதிகளவில் ஆக்சிஜன் செலுத்த வேண்டிய நிலை வந்ததால் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ளும்படி மருத்துவர்கள் அனுப்பிவிட்டனர்.

    தற்போது, மருத்துவமனைகள் கைவிரித்து விட்டதால் உயிர் தத்தளிப்போடு வீட்டில் வைத்து பாதுக்காத்து வருகிறார் கங்கா. நாள் ஒன்றுக்கு 3 ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. 6 மணி நேரத்திற்கு ஒரு சிலிண்டர் உபயோகிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆக்சிஜன் இருந்தால் மட்டுமே வாழ வேண்டிய சூழலில் கணவர் உள்ளதால் கங்கா பலரிடம் கடன் பெற்றும், தாலிக் கொடி வரை விற்று இதுநாள் வரை ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி காப்பாற்றி வந்துள்ளார்.

    தற்போது, கடன்களில் தத்தளிக்கும் கங்கா கைக்குழந்தைக்கு பால் வாங்க கூட பணம் இல்லாமல், பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளதாகவும்கணவரை காப்பாற்ற என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து நிற்பதாகவும் கூறி கண்ணீர் விட்டு கதறினார். இனி தமிழக அரசின் உதவியைத் தவிர வேறு ஆறுதல் இல்லை என கூறிய கங்கா தன் கணவரை காப்பாற்றவும், அரசு ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கணவரோடு 24 மணி நேரமும் உடனிருப்பதால் தன்னால் வேலைக்கு செல்லவும் முடியாது.

    எனவே, அரசு நிவாரணம் ஏதேனும் வழங்கி உதவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி