மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் வாயிலாக வழங்கப்படும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதுமின்றி மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பேருந்து பயண அட்டையை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 28.03.2022 (திங்கள்) மற்றும் 29.03.2022 (செவ்வாய்) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் புதிய கட்டிடம்(மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில்) நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை பெற்றுள்ளவர்கள் மேற்படி நாட்களில் நடைபெறவுள்ள,இலவச பேருந்து பயண அட்டை புதுபித்தல் முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-2 மற்றும் இலவச பேருந்து பயண அட்டை அசல் மற்றும் நகல் ஆகியன எடுத்துக்கொண்டு வந்து, இலவச பேருந்து பயண அட்டையை புதுபித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தி உள்ளார்.
எனவே மாற்றுதிறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது அடையாள அட்டையை புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.