விழுப்புரத்தில் இன்று 19-வது மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் ஒமைக்ரான் கொரோனா நோய் அதிகரித்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு விழுப்புரத்தில் இன்று நடைபெறும் 19 - வது மெகா தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மோகன் வேண்டுகொள் விடுத்துள்ளார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் இன்று (22.01.2022) 1015 இடங்களில்19-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஒமைக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சுமார் 141 நபர்கள் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு அதிகமாகவும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு குறைவான நோய் தொற்று பாதிப்பும் காணப்பட்டன.
அகையினால்,பொதுமக்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமிற்கு வருகை புரிந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.