விழுப்புரம் அருகே 15 வயது அரசு பள்ளி மாணவியை, மாணவியின் மாமன் உட்பட 10 பேர் சேர்ந்து தொடர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டு பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர் உட்பட 3 பேரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 15 வயது மகள் செஞ்சி அருகேயுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவி கடந்த சில தினங்களாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வாக இருந்துள்ளார். இதனையடுத்து பள்ளி ஆசிரியை ஹேமலதா மாணவியை அழைத்து பேசியிருக்கிறார்.
அப்போது, தனது தாய்மாமன் சசி என்பவர் தன்னை பல நாட்களாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் அவருடன் அவரது நண்பர்கள் 9 பேர் இணைந்து தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளார். இதனைகேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிற்கு தகவல் தெரிவித்து இச்சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துமாணவியிடம் பாலியல் வண்புனர்வில் ஈடுபட்ட உறவினரான சசி, மணிகண்டன், விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்து மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பாலியல் வண்புனர்வு சம்பவத்தில் தொடர்புடைய 7 நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.