விழுப்புரம் அடுத்து
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பிடாகம் என்ற கிராமம். பிடாகம் கிராமம் முழுவதும் விவசாய பகுதியாக காணப்படும். தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு தென்பெண்ணை ஆற்றின் ஓரமாக மூத்த தேவி சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டு குறித்து வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவனிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். இந்த சிற்பம் குறித்து நேற்று பிடாகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட செங்குட்டுவன் கூறுகையில், "இந்த மூத்ததேவி சிற்பம் பல்லவர் காலத்தை சேர்ந்தது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் இதுபோன்ற மூத்த தேவி சிற்பங்கள் காணப்படுகின்றன. தற்போது பிடாகம் பகுதியில் இந்த சிற்பம் கிடைத்துள்ளது. ஆற்றில் இந்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு பெய்த பருவமழை காரணமாக இச்சிற்பம் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சிற்பம் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அழகாக மூத்ததேவி தனது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோருடன் காட்சி தருகிறார்" என இந்த சிற்பத்தை பற்றிய விவரங்களை பகிர்ந்தார். மேலும் இது போன்ற தொன்மையான சிற்பங்களை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.