கூவாக கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற கூத்தாண்டவர் கண் திறத்தல் நிகழ்ச்சியில் ஏராளமான திருநங்கைகள் தாலி கட்டி கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இத்தாண்டு கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த 5 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது அதன் படி கூத்தாண்டவர் கோயிலின் முக்கிய நிகழ்வான சாமிகண் திறத்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் ஏராளமான திருநங்கைகள் பூசாரி கையால் மணக்கோலத்தில் தாலி கட்டி கொண்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த திருவிழாவை திருநங்கைகள் கும்மியடித்தும், பாட்டு பாடியும் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மிஸ் கூவாகம் 2002 க்கான பட்டம் என்ற அழகி மெஹந்தி என்ற திருநங்கையும் கலந்து கொண்டார்.
இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தின் போது பந்தலடியில் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்தி சோகத்துடன் சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.
நாளை மாலை பலிச்சோறு படையலிடப்பட்டு குழந்தை பாக்கியம் இல்லாத புதுமண பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு
21ம் தேதி விடையாத்தியும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.