விழுப்புரத்தில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் செயல்!
விழுப்புரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதனை குறைப்பதற்கு போக்குவரத்து காவல்துறையின் பல்வேறு முயற்சிகளையும் ஏற்பாடுகளும் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் தடுப்புகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் அருகில் நேற்று மினி லாரி மோதியதில் கட்டிடதொழிலாளி பலியானார். இதுபோன்ற பல விபத்துகள் இப்பகுதியில் அடிக்கடிஏற்பட்டு வருகிறது.
இதுபோன்ற தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் விழுப்புரம் போக்குவரத்து போலீசார், விழுப்புரம் உழவர் சந்தைஅருகில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரை 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின்நடுவே பேரிகார்டு மூலம் தடுப்புகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அவ்வழியாக வரும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பேரிகார்டு அமைந்துள்ள பகுதியில் நிறுத்தக்கூடாது என்றும் பேரிகார்டுமுடியும் இடத்தில் வாகனங்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்லவேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்வசந்த் தலைமையிலான போலீசார் அறிவித்து வந்ததோடு போக்குவரத்து விதிகளை வாகனஓட்டிகள் அனைவரும் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதையும் கண்காணித்தனர்.
மேலும் பேருந்து நிறுத்தத்தில் மட்டும்தான் பேருந்து நிறுத்த வேண்டும் மற்ற இடங்களில் நிறுத்தக்கூடாது என பேருந்து ஓட்டுநருக்கு எச்சரித்தும், தேவையில்லாத இடத்தில் பொதுமக்களை நிறுத்தி ஏற்றக் கூடாது எனவும் கூறினர்.
மேலும் பொதுமக்கள் போக்குவரத்து காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு தந்து, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(Viluppuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.