Home /local-news /

விஷம் குடித்ததாக நாடகமாடிய மாணவர்.. லாரி உரிமையாளரிடம் வழிப்பறி.. விழுப்புரம் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்..

விஷம் குடித்ததாக நாடகமாடிய மாணவர்.. லாரி உரிமையாளரிடம் வழிப்பறி.. விழுப்புரம் மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்..

Today's Top Stories of Villupuram District

Today's Top Stories of Villupuram District

Villupuram District Headlines | விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த செய்திகளின் ஒரு சிறிய தொகுப்பு

    விழுப்புரம் மாவட்டத்தின் இன்றைய (21.04.22) முக்கிய செய்திகள்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர்ப்பு கூட்டம்

    விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 22ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுக்கலாம்.

    விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

    விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 22ம் தேதி நடக்கிறது. ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 18 முதல் 30 வயது வரையுள்ள பதிவுதாரர்கள் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.

    விழுப்புரத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

    விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள எஸ்.ஐ., தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 20ம் தேதி மதியம் 2:00 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது.

    பிறப்பு சான்றிதழை காலதாமதமின்றி வழங்க ஆட்சியர் அறிவுறுத்தல்

    விழுப்புரம் மாவட்டம், கெடார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பிறப்பு சான்றிதழை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும், சித்த மருத்துவ பிரிவு பகுதிக்குச் சென்று நாள்தோறும் சிகிச்சை பெற வருபவர்களின் விவரங்களை கேட்டறிந்ததுடன், சித்த மருத்துவ பயன்பாட்டை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதுடன் உடற்பயிற்சி குறித்தும் ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கிட வேண்டும் எனவும் கூறினார்.

    அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நிழலில்லா நாள் நிகழ்ச்சி

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பில்,\" நிழலில்லா நாள் - 2022 \" இன்று மதியம் 12.11 மணியளவில் இதற்கான செய்முறையினை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அனைத்து துறை மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆய்வு செய்த ஆட்சியர்

    மாவட்ட ஆட்சியர் இன்று(21.04.2022) கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது நிதியின் கீழ் ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டார்.
    இதனை தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் பாடங்கள் குறித்து கேட்டறிந்து ஒவ்வொருவரிடமும் விருப்பம் உள்ள துறையை தேர்வு செய்து சாதனையாளர்களாக வேண்டுமென அறிவுறுத்தினார்.

    வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து கெங்காபுரம் கிராமத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது . இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலால் பொதுமக்கள் அவதி.

    செய்முறை தேர்வு குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டம்

    விழுப்புரம் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவதற்கான ஆலோசனைகள்,மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமையில் ஆயத்த கூட்டம் நடந்தது.

    பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

    விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் குழு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    1,200 ரூபாயை வழிப்பறி செய்த நபரை கைது செய்த போலீசார்

    விழுப்புரம் முத்துவேல் லே அவுட்டை சேர்ந்த லாரி உரிமையாளர் சுதாகர், 42; என்பவர் பைக்கில் சென்றபோது வழிமறித்து கத்தியை காட்டி 1,200 ரூபாயை பறித்த விழுப்புரம் ஜால்னா தெருவை சேர்ந்த மேகநாதன், 38; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    விஷம் குடித்தது போல் நாடகமாடிய பள்ளி மாணவனால் பரபரப்பு


    விழுப்புரம் அருகே கோலியனூர் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி, ஆபத்தான முறையில் முண்டியபாக்கம் மருத்துவ மனையில் அனுமதி. இதன்பிறகு மாணவன் விஷம் குடித்தது போல் நடித்தது தெரியவந்தது. இச்செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : சு . பூஜா,- விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி