Home /local-news /

விழுப்புரம் மாவட்டத்தின் இன்றைய (30.04.22) செய்திகள் தொகுப்பு

விழுப்புரம் மாவட்டத்தின் இன்றைய (30.04.22) செய்திகள் தொகுப்பு

Today's News Collection of Villupuram District

Today's News Collection of Villupuram District

Villupuram | விழுப்புரத்தில் புழுதி பறக்கும் சாலையால், அவதியுறும் பொதுமக்கள் உள்ளிட்ட சில முக்கிய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்.

    காகுப்பத்தில் இயங்கி வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

    விழுப்புரம் காகுப்பம் ஏரியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2007 ம் ஆண்டு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள மோட்டார்களில் பழுது ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாமல் பராமரிப்பின்றி உள்ளது.இதனால், இந்த நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் காகுப்பம் ஏரியில் விடுவதால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தோல் நோய், கருச்சிதைவு ஏற்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், சட்ட மன்ற உறுப்பினர் லட்சுமணன், காகுப்பம் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தனர்.


    தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

    விழுப்புரத்தில் சேக்ரட் ஹார்ட் சென்ட்ரல் பள்ளி உள்ளது, இப்பள்ளியில் இன்று விழுப்புரம் நகராட்சி, மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்துகொண்டார்.

    மாவட்டம் முழுவதும் 1040 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றனஎனவும், பொதுமக்கள் அனைவரும் முகாம்களில் மூலம் தடுப்பூசியை சிரித்துக்கொண்டே வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

    நெடுஞ்சாலையில் சாய்ந்த படியாக காட்சிதரும் கம்பம்

    விழுப்புரம் அருகே உள்ள பெரியசேவலை நெடுஞ்சாலையில் உள்ள கூட்டு சாலையில் சிக்னல் கம்பம் ஒரு மாத காலமாக சாய்ந்துள்ளது. இந்த வழியாக திருக்கோவிலூர், சித்தூர் பல பகுதிகளுக்கு பேருந்துகள் , கனரக வாகனங்கள் இந்த சாலையில் செல்கின்றன. திடீரென இந்த கம்பம் விழுந்தால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும், ஆகையினால் பெரிய சேதம் ஏற்படுவதற்கு முன் இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புழுதி பறக்கும் சாலையால், அவதியுறும் பொதுமக்கள்

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்து கட்டளை, தென்னம்பூண்டி, கீழ்புதேரி, பெருமுக்கல், அழகியபாக்கம், குருவம்மாபேட்டை, பிரம்மதேசம், கீழ்அருங்குணம், வெள்ளகுளம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் ஜல்லி உடைப்பதற்காகவும், எம்சாண்ட் ஆகியவற்றின் தயாரிப்புக்காகவும் 50க்கும் மேற்பட்ட கிரசர்கள் இயங்கி வருகிறது.

    கிரசர் பயன்படுத்துவதால், அப்பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு புழுதி பறக்கும் காற்றால் சுவாச கோளாறு, தோல்நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கவலை அடைகின்றனர்.

    எனவே இதனை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேயர் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    இன்று விழுப்புரம் திருவிக வீதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது. மேலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

    இதில் விழுப்புரத்தில் பல்வேறு பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு பழைய புரிந்தனர்.

    பனை ஏறும் தொழிலாளர்களின் 100வது நாள் உரிமை மீட்பு அறப்போராட்டம்


    விழுப்புரம் அடுத்த பூரி குடிசைப்பகுதியில் தமிழ்நாடு கள் இயக்கம் மற்றும் தமிழ்நாடு பனையேறிகளின் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் கள் இறக்கி விற்கும் உரிமை வீட்டு அறப்போராட்டத்தில் நூறாவது நாள் இன்று.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கள்ளை பாரம்பரிய உணவாக அறிவிக்க வேண்டும் எனவும், கள் விற்பதற்கு தடையை நீக்க வேண்டும் எனவும், என பல்வேறு கோரிக்கைகளை வைத்து என்று கூறி குடிசை பகுதியில் உள்ள பனையேறும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கூறி குடிசைப் பகுதியில் உள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற்றம் : பொதுமக்கள் அவதி

    விழுப்புரம் டூ பாணாம்பட்டு சாலையில், ரயில்வே கேட் அருகே செல்லும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் பொதுமக்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

    இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், நகராட்சி அதிகாரிகள் இதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    லயன்ஸ் கிளப் சார்பாக நாளை மாபெரும் ரத்ததானம் சிறப்பு முகாம்

    விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் குடும்பம் சார்பில்,மாபெரும் ரத்த தான முகாம் வருகிற நாளை (01-05-2022) காலை 9.30மணி முதல் மதியம் 1 மணி வரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற உள்ளது. எனவே ரத்ததானம் செலுத்துபவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி