Home /local-news /

விழுப்புரம் மாவட்ட முக்கிய நிகழ்வுகள் இதோ..!!

விழுப்புரம் மாவட்ட முக்கிய நிகழ்வுகள் இதோ..!!

Today's News Collection of Villupuram District

Today's News Collection of Villupuram District

Villupuram District: விழுப்புரம் மாவட்ட செய்தி தொகுப்பு

  விழுப்புரம் மாவட்ட செய்தி தொகுப்பு

  விழுப்புரம் அருகே சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

  விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலில் சோழர்கால கல்வெட்டை விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ் குழுவினர் கண்டுபிடித்தனர். ஊரின் வடக்கே செய்தருளி ஈஸ்வரர் என்னும் பழமையான சிவன் கோவில் கருவறையின் தென்கிழக்கு பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழனின் இரண்டாம் ஆட்சி ஆண்டான கி.பி. 1,072-ல் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இவ்வூரை கப்பூர் என்றும், இங்குள்ள இறைவனை செய்தருளு நாயனார் என்றும் அழைக்கிறது.

  மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

  இந்த போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிட பள்ளி, சிறப்பு பள்ளிகள் என 9 பள்ளிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

  இவர்களில் கை, கால் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், மனநலம் குன்றியோர், காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
  இதில் தடகளத்தில் 50 மீ, 100 மீ, 200 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளில் கபடி, இறகுப்பந்து, கைப்பந்து, எறிபந்து ஆகிய போட்டிகளும் நடந்தன.

  கொடியேற்றத்துடன் தொடங்கிய செஞ்சி கோட்டை கமலக்கண்ணி கோயில் திருவிழா

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் கமலக்கண்ணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பூஜைகளுடன் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கோவில் திருவிழா செஞ்சி மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா பொதுமக்களிடம் கருதப்படுகிறது.

  மண் வளம் குறித்த விழிப்புணர்வு முகாம்

  விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், தொண்டூா், பூதேரி கிராமங்களில் மண் வள அட்டை, பாசனநீா் பரிசோதனை விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நடமாடும் பரிசோதனை நிலையத்தின் மூலம் மண் மாதிரி சேகரித்தல், பரிசோதனை செய்தல், இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளின் வயல்களில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

  பாசன நீரின் களா் அமிலத் தன்மை, உப்பின் அளவு கண்டறியப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

  அட்சய திருதியை-யில் நகைக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்

  அட்சய தினத்தில் எந்தவொரு பொருட்கள் வாங்கினாலும் தொடர்ந்து அந்த பொருட்கள் அதிகளவில் வந்து நம்மிடம் சேரும் என நம்பிக்கை. அதேபோல் அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செழிப்பாகவும், அதிர்ஷ்ட்மாகவும் இருக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை.

  இந்நாளை பொதுமக்கள் நகை கடைகளில் குறைந்த அளவிலாவது தங்கம் வாங்குவது வழக்கமாக கொண்டவர் இதனால் இன்று காலை முதல் மாலை வரை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

  விமரிசையாக கொண்டாப்பட்ட ராமலான் பண்டிகை

  ரமலான் பண்டிகையையொட்டி விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்‌‌கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகுற காட்சியளிக்கின்றன. காலையிலிருந்தே பள்ளி வாசல்கள் முன் திரளும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர். புத்தாடை அணிந்தும் இனிப்புகளை மற்றவர்களுக்கு வழங்கியும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  இந்நாளின் முக்கிய நிகழ்வான பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரமலான் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் ரமலான் வாழ்த்து கூறி வருகின்றனர்.

  செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
  Published by:Arun
  First published:

  Tags: Villupuram

  அடுத்த செய்தி