Home /local-news /

விழுப்புரம்: பட்டன் ரோஸ் சாகுபடியில் அதிக லாபம் பெறும் ரகசியம்

விழுப்புரம்: பட்டன் ரோஸ் சாகுபடியில் அதிக லாபம் பெறும் ரகசியம்

Villupuram:

Villupuram: The  most profit from the cultivation of Button Rose

பட்டன் ரோஜா கிலோவிற்கு 150 ரூபாய்க்கு குறையாமல் விலை போகும். அதுவே, சீசன் காலங்களில் கிலோ 600 ரூபாயிலிருந்து- 700 ரூபாய்க்கு விற்பனை ஆகும்.

    விழுப்புரம் : பட்டன் ரோஸ் சாகுபடியில் அதிக லாபம் பெறும் ரகசியம்

    தமிழகத்தில் விவசாயிகள் பெரும்பாலும் கீரைகள், காய்கறி, பழங்கள், நெல் ரகங்கள் கரும்பு வகைகள் போன்றவை போல மலர்களின் அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.

    பெரும்பாலான கிராமங்களில் சாமந்தி, முல்லை, குண்டுமல்லி, சம்மங்கி போன்ற பல மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த மலர் சாகுபடி ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடியது. ஒரு சில மலர்கள் அந்தந்த பருவத்தில் மட்டும் விற்பனைக்கு ஏற்றதாக அமையும்.

    அதுபோல காக்கட்டான் பூ, முல்லைப் பூ, குண்டு மல்லி போன்ற மலர்கள் சாகுபடி செய்யும் நேரத்தில் பட்டன் ரோஸ் மலர்களையும் சாகுபடி செய்வார்கள். ஏனென்றால் பட்டன் ரோஸ் இந்த பூக்களுடன் சேர்த்து கட்டி விற்க முடியும்.

    ஒரு சிலர் இதனை தனியாக விற்பனை செய்வார்கள். ஆனால், அதிக அளவில் இந்த பூக்கள் முல்லை, குண்டு மல்லி போன்ற பூக்களுடன் சேர்த்து கட்டினால்தான் அழகாக இருக்கும் என விவசாயிகள் பட்டன் ரோஜாவை சாகுபடி செய்வார்கள்.

    விழுப்புரத்தில் பிடாகம் தேசிய நெடுஞ்சாலையின் பக்கத்தில் ஒரு ஏக்கர் அளவில் பட்டன் ரோஜாவை விவசாயி குணசேகர் பயிரிட்டுள்ளார். திண்டிவனம், செஞ்சி போன்ற இடங்களில் பட்டன் ரோஜா பயிரிடுவதை தவிர்த்து விழுப்புரத்தில் இந்தப் பகுதியில்தான் பட்டன் ரோஜா பயிரிடப்பட்டுள்ளது.

    பட்டன் ரோஜா செடியை பூச்சித் தாக்குதல் இல்லாமல் பராமரித்து வந்தால் ஒரு செடிக்கு குறைந்தபட்சம் 20 - 50 பூக்கள் பூக்கும்.
    ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் நாம் ஒரு நாளைக்கு 50 லிருந்து 100 கிலோ வரை பூக்கள் சாகுபடி செய்யலாம். ஆனால், இந்த பட்டன் ரோஜா செடியில் ட்ரிப்ஸ் எனப்படும் சாறு உறிஞ்சு பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படும்.

    இதுகுறித்து இன்னொரு விவசாயி ராஜசிம்மன் பேசுகையில் , \"இந்த தாக்குதலை கண்டுபிடித்து அதற்குத் தேவையான மருந்துகளை தெளித்தால் நாம் மகசூலை ஈட்டலாம். இந்த சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல் மூலம் மகசூல் குறையக்கூடும். பூக்களின் அளவு சிறியதாக இருக்கும், பூக்கள் கருப்பு நிறமாக மாறி கருகிப் போகும் அளவிற்கு காணப்படும். அதனால், இந்த தாக்குதல் இல்லாமல் செடிகளை நாம் பராமரிக்க வேண்டும்.

    செடிகளின் மத்தியில் களைகளை நீக்கவேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 5 மீட்டர் இடைவெளி விட்டு நட வேண்டும்.

    இதுபோன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் பட்டன் ரோஜா சாகுபடியில் நல்ல முறையில் லாபம் ஈட்டலாம் என ராஜசிம்மன் என்ற விவசாயி கூறுகிறார். பட்டன் ரோஜா கிலோவிற்கு 150 ரூபாய்க்கு குறையாமல் விலை போகும். அதுவே, சீசன் காலங்களில் கிலோ 600 ரூபாயிலிருந்து- 700 ரூபாய்க்கு விற்பனை ஆகும்.

    ஏக்கருக்கு சராசரியாக 2500 ரூபாயிலிருந்து - 30,000 ரூபாய் வரை லாபம் ஈட்டலாம். அதிகபட்சமாக 45,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கக் கூட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற பட்டன் ரோஜாவை பயிரிடுவதற்கான சேட் நெட், க்ரீன் நெட் (shade net, green net ) போன்றவை அமைப்பதற்கு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சிறந்த மானியம் வழங்குகிறது.

    நல்ல பராமரிப்பும், கவனமும் இருந்தால் பட்டன் ரோஜா சாகுபடி நல்ல லாபத்தை தரும் என்கிறார் விவசாயி.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி