ஒவ்வொரு மாதமும் மேல்மலையனூரில் வந்தது மட்டும் பொதுமக்களால் விமர்சையாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். ஆனால், தற்போது கொரோனா, ஒமைக்ரான் பெருந்தொற்றுகள் காரணத்தினால், பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வரும் 31 ஆம் தேதி அமாவாசை தினத்தன்று மேல்மலையனுார் அங்காளம்மன் கோயிலின் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் கொரோனா சூழலில் கூட்டமாக கூடவேண்டாம் என்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ராமு பக்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.