விழுப்புரம் மாவட்டம் நகரப்பகுதியான அமைச்சாரம்மன் கோயில் வீதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஜீவா. காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்.
இவரது வீட்டின் வாயிலில் முன்பு கேட்பாரற்று கிடந்த ஹேண்ட் பேக்கினை எடுத்து பார்த்தபோது, செல்போன், 2,000 ரூபாய் பணம், 3 ஏ.டி.எம் கார்டுகள் போன்றவை இருந்துள்ளன. ஹேண்ட் பேக்கினை பத்திரமாக எடுத்து சென்று தனது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன்பின்பு, ஜீவாவும் அவரது தந்தை உமாபதியும் சேர்ந்து இன்று விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் எஸ் பி ஸ்ரீநாதாவை பார்த்து ஹேண்ட் பேக்கினை ஒப்படைத்தனர். அதன்பின்பு, எஸ்பி அந்த ஹேண்ட் பேக்கினை வாங்கி அதில் என்ன இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்த்தார். அதில், 15,000 ரூபாய் மதிப்புள்ள செல்ஃபோன், 2,000 ரூபாய் பணம், ஏ.டிஎம். கார்டுகள் இருந்தது தெரியவந்தது.
இந்த ஹேண்ட் பேக்கினை கொண்டுவந்து போலீஸிடம் ஒப்படைத்த நற்செயலை பாராட்டி மாணவர் ஜீவாவிற்கு எஸ்பி ஒரு பரிசினையும் வழங்கினார். அனைத்து மாணவர்களும் இந்த மாணவரைப் போல நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும், இதே ஒழுக்கத்துடன் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் எனவும் அறிவுரைக்கூறி அனுப்பினார்.
செய்தியாளர் : சு . பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.