Home /local-news /

விழுப்புரம்: சிதைந்துவரும் பழமைவாய்ந்த தாளகிரீஸ்வரர் கோயில்  ஓவியங்கள் 

விழுப்புரம்: சிதைந்துவரும் பழமைவாய்ந்த தாளகிரீஸ்வரர் கோயில்  ஓவியங்கள் 

Thalagriswarar 

Thalagriswarar  ancient temple paintings Destroying condition

Villupuram News | பல்லவர், சோழர், நாயக்கர் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரின் கல்வெட்டுக்கள் பல்லவர் கால ஓவியம் காணப்படுகின்றன.

    விழுப்புரம் மாவட்டம் பனை மலைபேட்டை கிராமத்தில் வயல் வெளிகளுக்கு மத்தியில் கம்பீரமாய் தோற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளது பழமையான தாளகிரீஸ்வரர் கோயில்.

    இக்கோயில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் பல்லவ பேரரசன் ராஜசிம்மனால் கட்டப்பட்டது. மலைகளின் குன்றின் மீது உள்ள இக்கற்கோயில் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயில் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோயில்களின் காலத்தைச் சேர்ந்தது.இதன் தனிசிறப்பம்சம் என்னவென்றால், இக்கோயிலில் உள்ள லிங்கம் இந்தியாவில் எங்குமில்லாத பதினாறு பட்டைகளுடன் கூடிய லிங்கமாகக் தாளகிரீஸ்வரர்காட்சியளிக்கிறார்.

    பல்லவர், சோழர், நாயக்கர் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரின் கல்வெட்டுக்கள் பல்லவர் கால ஓவியம் காணப்படுகின்றன. கோயிலின் வடக்கிலுள்ள சிற்றாலயத்தின் மேற்கு சுவரில் சிவபெருமானின் சம்ஹார தாண்டவ ஓவியமும், வடக்குச் சுவற்றில் பார்வதி தேவியின் அழகிய வண்ண ஓவியம் மட்டும் சிதைந்த நிலையில் உள்ளன.மேலும் மகுடம் தரித்த தலைக்கு மேல் அழகிய வண்ணக் குடை, ஒருகால் தரையில் நின்றிருக்க மற்றொரு காலை மடித்து, தலையைச் சாய்த்து, அழகிய அணி கலன்களுடன் ஒய்யாரமாக உமையம்மை ஓவியமும் உள்ளன.

    இந்த ஓவியங்கள் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் தென்னிந்திய, தமிழக ஓவியக்கலை மரபில் குறிப்பிடத்தகுந்த இடத்தையும், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களாலும், இந்திய ஆறிஞர்களாலும் பனைமலை ஓவியம் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிவனின் சம்ஹார தாண்டவ ஓவியம் முற்றிலுமாக அழிந்துவிட்ட நிலையில், பார்வதி தேவியின் ஓவியமும் அந்த நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல் பாறை கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் பாதுகாப்பில்லாமல் சிதிலமடைந்து வருகிறது.தமிழர்களின் கலையுணர்வை காட்டும் வரலாற்றுப் பெட்டகமாக உள்ள பனைமலை கோயிலின் சிற்பங்கள் மற்றும் ஓவியத்தின் எஞ்சியப் பகுதியை பாதுகாக்க தமிழக அரசும், தொல்லியல் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Vijay R
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி