முருகனுக்கு உகந்த நாளாக விளங்குவது தைப்பூசம் ஆகும். தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூசம் திருநாளன்று முருகன் கோயில்களுக்கு பக்தர்கள் காவடி எடுத்து செல்வது வழக்கம். அதன்படி அறுபடை வீடுகளிலும் தமிழகம் முழுவதிலுமுள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக, எளிமையாகவும், கூட்டம் அதிகம் சேராமல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், விழுப்புரம் விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள வட குச்சிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி சுவாமி அருளிய, பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆலயத்தில் எட்டாம் ஆண்டு தைப்பூச பெருவிழா இன்று நடைபெறுகிறது.
முன்கூட்டியே தைப்பூச திருவிழாவிற்காக காவடிகள் அலங்கரிப்பது, முருகன் சுவாமியை சந்தனகாப்பு ராஜ அலங்காரத்தில் அலங்கரித்துள்ளனர். மேலும் நேற்றே முன்னேற்பாடுகள் அனைத்தையும் முழுமையாகவும் விறுவிறுப்பாக செய்தனர்.
மேலும் இன்று காலையில் காவடி எடுப்பது, வீதி உலா, தேர் வீதி உலா மற்றும் மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்ய ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.