விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் மாவட்ட ஜல் சக்தி குழு மூலம் மழைநீர் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை வகித்து,ஜல் சக்தி அபியான் - 2022 விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.
இப்பேரணியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக, பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம், பல்வேறு வகையான விழிப்புணர்வு அறிவுரையை வழங்கினர்.
மாணவர்களின் கையில் ஏந்திய பதாகைகளும் இடம்பெற்றிருந்த
வாசகங்கள் :
கட்டிடங்களில் மேல் விழும் மழைநீரை சேகரிக்க மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் அமைப்போம்.
மழைநீரை சேகரிக்க நீர் செறிவூட்டும் கிணறு நீர் செறிவூட்டும் நிலத்தடி தண்டு குழாய்,கீழ் மட்ட தடுப்பு சுவர் மற்றும் கருங்கற்கள் தடுப்பணை அமைப்போம்.
நிலத்தடி நீர் அதிகப்படியான சுரண்டப்பட்ட நிலப்பரப்புகளில் நிலத்தடி நீரை சேகரிக்க கட்டமைப்பு மேம்படுத்துவோம்.
அதிகப்படியான வண்டல் உள்ள நீர் நிலைகளை அறிந்து விவசாயத்திற்கு வண்டல் மண் உபயோகித்து விளைச்சலை மேம்படுத்துவோம்.இதனால் நீர் நிலை நீர் தேக்கும் திறனை அதிகப்படுத்துவோம்.
நீர் நிலை மாசுபடுவதை கண்டறிந்து தடுப்போம்.ஏரிகளை தூர்வாருவோம்.ஏற்படுத்திய ஆழ்துளை கிணறுகளை மறு உபயோகப்படுத்துவோம்.ஈரநிலத்தினை மறுமலர்ச்சி அடைய செய்வோம்.
வெள்ள தடுப்பு கரைகளை பாதுகாப்போம்.நீருற்றுகளை மேம்படுத்துவோம்.நீர் பிடிப்பு பரப்புகளை பாதுகாப்போம். அடங்கிய விளம்பர பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுதுடன், மாணவர்கள் பேரணியாக வீணாக்காதீர் வீணாக்காதீர் மழை நீரை வீணாக்காதீர் இந்த வாசகங்களை கூறியபடி மாணவர்கள் நீண்ட வரிசைக்கொண்டு பேரணியாக, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி பழைய பேருந்து நிலையத்தில் வந்து முடிவடைந்தது .
இந்த பேரணியின் போது மக்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rain Water Harvesting, Villupuram