Home /local-news /

இயற்கை விவசாய முறையில் கீரை, காய்கறி உற்பத்திக்கான நேரடி செய்முறை - நிலத்தில் களப்பயிற்சி!

இயற்கை விவசாய முறையில் கீரை, காய்கறி உற்பத்திக்கான நேரடி செய்முறை - நிலத்தில் களப்பயிற்சி!

இயற்கை

இயற்கை விவசாயம் குறித்த நேரடி களப்பயிற்சி

Villupuram : விழுப்புரம் அகரம் பகுதியில் உள்ள பசுமை சோலை இயற்கை பண்ணையில், இயற்கை விவசாய முறையில் கீரை மற்றும் காய்கறி சாகுபடி செய்வது குறித்த இரண்டு நாட்கள் நேரடி களப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 75 சதவீதம் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். பல வழிகளில் விவசாயிகள் புதிய புதிய வழிமுறைகளை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் விவசாயம் செய்து, இயற்கை உணவை பொது மக்களுக்கு தரவேண்டும் என்பதே விவசாய மக்களின் நோக்கமாகும்.

    சுயசார்பு இயற்கை விவசாயம் குறித்த சிறப்பு தொழில்நுட்ப களப்பயிற்சி மூலம், துல்லிய சுயசார்பு இயற்கை விவசாய பண்ணை பயிற்சியாளர் பாண்டியனை கொண்டு, அகரம் பகுதியில் உள்ள பசுமை சோலை இயற்கை பண்ணையில், முருகன் என்ற விவசாயி வைத்துள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் கீரை மற்றும் காய்கறி சாகுபடி செய்வது குறித்த நேரடியாக நிலத்திலேயே களப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இது, இரண்டு நாட்கள் (மார்ச் 19, 20) நடைபெறுகிறன. இந்த பயிற்சிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயத்தில் ஆர்வம் உள்ள நபர்கள் வருகை புரிந்துள்ளனர்.

    சிவகங்கை, பெரம்பலூர் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த பயிற்சிக்கு வருகை புரிந்தார்கள். இந்த களப்பயிற்சியில், நாற்றங்கால் தயாரிப்பு, பாத்தி நடவு தொழில்நுட்பங்கள், இயற்கை உரங்களான பூச்சி விரட்டி தயாரிப்பு தொழில்நுட்பங்கள், சாகுபடி குறித்த விரிவான பயிற்சி ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பிற்கு, பயிற்சி கட்டணமாக 900 ரூபாய் பெறப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.
    முதல் நாள் களப்பயிற்சியான இன்று, கீரைக்கு உரிய பாத்தி நடவு, மற்றும் விதை நடவு, தண்ணீர் பாய்ச்சும் முறை போன்ற வழிமுறைகள் குறித்த பயிற்சி கற்றுத்தரப்பட்டன.

    இதனை பயிற்சி புரிபவர்களுக்கு, பயிற்சியாளர் நேரடியாக நிலத்தில் இறங்கி கற்றுக் கொடுத்தார். இந்த பயிற்சி வகுப்பு குறித்து சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வருகை புரிந்த பிரபு என்பவர் கூறுகையில், கீரை சாகுபடி குறித்து பயிற்சி வகுப்பு எங்கையாவது நடைபெறுகிறதா என மொபைலில் தேடுகையில், விழுப்புரத்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என்பது தெரியவந்தது. அதன்பின் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.

    எனக்கு விவசாயத்தில் மிகுந்த ஆர்வம். கீரைக்கு அதிக மவுசு இருப்பதால், கீரை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். அதற்கு இந்த பயிற்சி வகுப்பு ஏதுவாக இருக்கிறது.

    இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து வகையான கீரை சாகுபடி குறித்த வழிமுறைகள் செய்முறை பயிற்சியாக அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இயற்கை முறையில் விவசாயம் செய்து, இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உற்பத்தி செய்து தர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாகும் என்று கூறினார்.

    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Farmers, Villupuram

    அடுத்த செய்தி