Home /local-news /

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்..

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம்..

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

Villupuram District | மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் இயக்குநர் உத்தரவின்பேரில், வரும் 24ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடக்கிறது

    மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் இயக்குநர் உத்தரவின்பேரில், வரும் 24ம் தேதி பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடக்கிறது.

    அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகளாக கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நலவாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழவும், சத்துக்குறைப்பாடின்றி வளரவும், தேவையான பாதுகாப்பு அளித்தல் மற்றும் திறமைகளை வெளிக்கொணர்தல், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் , நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் தேவையான அடிப்படை சேவைகளை வழங்குவது.

    கிராம சபை கூட்டம் - மாதிரி படம்


    கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்,பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல்,மக்கள் பங்கேற்புடன் கூடிய கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்து அதனை திறம்பட செயல்படுத்துதல், நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களும் குழந்தைகளும் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது, மக்கள் சக்தியை ஒன்று திரட்டி பல்வேறு பணிகளை மக்கள் பங்கேற்புடன் செய்வது தொடர்பான 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான செயல்கள் குறித்து விவாதிக்கவும்,உறுதிமொழி எடுக்கப்படவும் உள்ளது.

    எனவே ஏப்ரல் 24 அன்று நடைபெற உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அனைத்து கிராம பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு நீடித்த வளர்ச்சி திட்டத்திற்கான குறைந்தப்பட்ச இலக்குகளை செயல்படுத்திடவும்,தேவையான ஒத்துழைப்பையும் வழங்கிடவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


    செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
    Published by:Arun
    First published:

    Tags: Villupuram

    அடுத்த செய்தி