விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகள்
புகையிலை கடத்தி வந்த நபர் கைது
மேல்மலையனூர் அருகே வடுகப்பூண்டி-பூதமங்கலம் சாலையில் அவலூர்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹரிகிருஷ்ணன் மகன் ஹரிகுமார் (வயது 40) பைகளோடு வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்கு உள்ளிட்ட 5 ஆயிரத்து 130 பாக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.34 ஆயிரத்து 560 மதிப்பாகும்.
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிகழ்ச்சி : ஆட்சியர் மக்களிடம் நேரடித் தொடர்பு
முகையூர் ஊராட்சியில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் 835 மனுக்கள் பெற்று, 377 பயனாளிகளுக்கு ரூ.1.4 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்.
மேல்மலையனூர் அமாவாசை உற்சவம் நடை பெறாது ஆட்சியர் அறிவிப்பு
மேல்மலையனூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் பிரதி மாதம் நடைபெறும் அமாவாசை பெருவிழாவில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து ஊஞ்சல் உற்சவ சேவையை கண்டு தரிசனம் செய்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் இம்மாதம் நடைபெறும் அமாவாசை நாளான 30.04.2022 அன்று இத்திருக்கோயிலில் இரவு சித்திரை கரகம் வீதி உலா நடைபெற உள்ளதால் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தெரிவித்துள்ளார்.
மரக்காணம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சிறுவாடி கிராமத்தில், கட்டுப்பாட்டை இழந்து காரால் விபத்து ஏற்பட்டது. தடுமாறி கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் இரண்டு நபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயிலம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
மயிலம் அருகே உள்ள, செண்டூரை சேர்ந்தவர் ராஜாராம் மகன் ஆனந்தசெல்வன் (வயது 38). இவர் தனது நிலத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஆனந்த செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போனை பறித்து சென்று விட்டார்.
விழுப்புரத்தில் 29வது மெகா தடுப்பூசி முகாம்(30.4.22)
விழுப்புரம் ஆட்சியரகத்தில் தமிழக செயலகம் மூலம், குழந்தை தடுப்பூசி முகாம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையிலான நடைபெற்றது. 30.04.22 அன்று இருபத்தி ஒன்பதாவது மிகக்குறைந்த தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற உள்ளதால், வணக்கம் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் வலியுறுத்தியுள்ளார்
பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 2 பேர் மீது குண்டாஸ்
பள்ளி மாணவியை
பாலியல் வன்புணர்வு செய்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.தொடர் குற்றங்கள்விக்கிரவாண்டி தாலுகா செ.குன்னத்தூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தராஜேந்திரன் மகன் சசிக்குமார் (வயது 28), செ.குன்னத்தூர் மெயின்ரோட்டைசேர்ந்த குமார் மகன் தர்மராஜ் என்கிற மணிகண்டன் (21). இவர்கள் மீது பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்புபடித்து வரும் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட மாணவியை
பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் சசிக்குமார், தர்மராஜ் ஆகிய இருவரையும் விழுப்புரம்அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
பன்றியைப் பிடிக்க கூடாது என கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உரிமையாளர்கள்
விழுப்புரம் நகரில் பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. பன்றிகளை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதனை வளர்ப்போர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பன்றிகளை பிடிக்க எதிர்ப்புவிழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களில் பொது சுகாதாரத்திற்கு சீர்கேடாகவும்,விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கவேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலரும் புகார் அளித்தனர்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.