விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மீது அமைந்துள்ள கமலக்கன்னி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழாவின் கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது. இதில் அறங்காவலர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் கமலக்கன்னி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பூஜைகளுடன் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோயிளுக்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. 10-ம் நாள் விழாவாக வருகிற 10-ந் தேதி (செவ்வாய்கிழமை) தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது.
இதை முன்னிட்டு இன்று காலை 108 பால்குட ஊர்வலம், 10 மணிக்கு கூழ்வார்த்தல் அதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும், பகல் 1.30 மணிக்கு மேல் தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கமலக்கன்னி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செஞ்சிக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 10 நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதி வழங்கப்படுவதாக செஞ்சிக்கோட்டையை பராமரித்து வரும் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இத்திருவிழா செஞ்சிக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக விளங்குகிறது திருவிழாவிற்கு பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து, சாமி தரிசனம் பெற்று செல்கிறார்கள்.
செய்தியாளர் : சு. பூஜா - விழுப்புரம்
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.